கருணாநிதிக்கு தெரியாத சட்டம் இவருக்கு தெரிஞ்சிடுச்சா? -ஸ்டாலினை சாடும் பாஜக அண்ணாமலை!
கோவை பொண்ணையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய "மோடி கிட்டை" பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது
தொழில் துறைகள் அதிகம் நிறைந்த கோவையில் கொரோன தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் அதிகப்படியான இறப்பு பதிவாகி வருகிறது. ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் கடந்த ஒரு மாதகாலமாக கோவை புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். இப்போது பிரச்சனை துவங்கியவுடன் தடுப்பூசி தருகின்றனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது.
நீட் தேர்வு ஆய்வு குழு.. உறுப்பினர்கள் லிஸ்ட் இதுதான்!
'தான் அனைவருக்குமான முதல்வர்' என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நிதியமைச்சர் ,செய்தி தொடர்பாளர்களோ, தொலைக்காட்சியில் பேசும்போதோ மோடியிடம் கேளுங்கள் என கூறி வருகிறார். இதனால் தமிழக அமைச்சர்கள் முதல்வரின் கட்டுப்பாட்டில் (கன்ட்ரோல்) தான் உள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
குறிப்பாக முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாக பேசிவரும் நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர், ஜிஎஸ்டி கவுன்சில் பேசியவை அவர்கள் இன்னும் எதிர்கட்சியாகவே இருப்பதை போல காட்டுகிறது. இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்படுவர்.
2006-2010 வரை முதல்வராக இருந்த கருணாநிதி, 'மத்திய அரசு' என்ற வார்த்தையைதான் பயன்படுத்தினார். 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிதாக 'ஒன்றிய அரசு' என்ற புதுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள்.
இதன் மூலம், கருணாநிதி மத்திய அரசு என கூறியதை திமுகவினர் தவறு என கூறுகிறார்களா? கருணாநிக்கு தெரியாத சட்டம், அரசியலமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டதா? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment