மாஜி அமைச்சர்கள் மீது பாலியல் புகார்: அடுத்து சிக்கப் போவது யார்?
திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஊழல் புகாரில் கைதாவார்கள் என அரசியல் வல்லுநர்கள் ஆரூடம் கூறினர். ஆனால் பாலியல் குற்றச்சாட்டில் வரிசையாக வண்டியில் ஏறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த அமைச்சர் எந்த துறையில் நடந்த ஊழலுக்காக கைதாவார் என எதிர்பார்த்தால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை ஏமாற்றிய வழக்கில் கைதாக உள்ளார். நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ளார் மணிகண்டன்.
இந்த சூழலில் மேலும் மூன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்.பி ஆகியோர் இது போன்ற புகார்களில் சிக்கி விரைவில் கைதாகலாம் என கூறப்படுகிறது. மூன்று அமைச்சர்களில் இருவர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அந்த எம்.பி. மத்திய மண்டலத்தைச் சேர்ந்தவராம்.
தங்களிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள்
மாஜி அமைச்சர்கள் மீது புகார் அளிக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.
அதிமுக ஆட்சியிலிருந்த போதே ஒரு அமைச்சரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment