ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவு

ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவு



தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பெரும்பாலான மாநிலங்களில், 10 மற்றும் 12ம் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, நாளை முதல் ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அனைத்து துறைகளும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் அறிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறக்க முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். 1-ம் தேதி முதல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரலாம் என்றும், வருகைப்பதிவு கட்டாயம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், முதல் மாநிலமாக, தெலங்கானா அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad