ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: யார் இவர்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: யார் இவர்?

ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: யார் இவர்?


ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், மூத்த அரசியல் தலைவர் மற்றும் 'ஏழைகளின் நாயகன்' என புகழப்படும் இப்ராஹிம் ரைசி (60) ஈரானின் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ளார்.


மக்கள் மத்தியில் ஊழலை ஒழிக்கும் நாயகனாகப் புகழ் பெற்றவர் இப்ராஹிம் ரைசி. ஈரான் அரசியல் வட்டாரத்தில் இப்ராஹிம் உலகளவில் தெரிந்த முகம் இல்லை என்ற போதிலும் இவரது மக்கள் செல்வாக்கு அளப்பரியது. தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 62 சதவீத ஓட்டுகள் இவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானி அதிபர் பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் எதிர்ப்பை சம்பாதித்து வரும் ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர இப்ராஹிம் சிறந்த தலைவராக விளங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம் இவர் பொதுமக்களிடையே அடிக்கடி ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தது தான். ஊழல் செய்யும் உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை மக்கள் முன்னிலையில் கூறி, அவர்கள் எந்த வித ஊழலில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படையாக மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இப்ராஹிம் ரைசி.

ஈரானின் உயரிய தலைவர் அயோடெல்லா அல் கமேனி அடுத்த மாதம் தனது 82-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். வயது மூப்பு காரணமாக இவர் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஈரான் அதிபராக பதவி ஏற்க இருக்கும் இப்ராஹிம் ரைசி, கமேனியை அடுத்து ஈரானின் உயரிய தலைவராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஹாசன் ரோஹானி கையெழுத்திட்டதை இப்ராஹிம் கடுமையாக விமர்சித்திருந்தார். ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி அதன் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க இப்ராஹிம் பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். 1960-ம் ஆண்டு பிறந்த இப்ராஹிம் 1979-ம் ஆண்டு தனது 19வது வயதில் இஸ்லாமிய புரட்சியில் கலந்து கொண்டு அரசியல் வட்டாரத்தில் பிரபலமானார்.

டெஹ்ரானில் புரட்சிகர நீதிமன்றத்தின் துணை வழக்கறிஞராகப் பணியாற்றிய இப்ராஹிம், வலதுசாரி எதிர்ப்பாளராகத் திகழ்ந்தார். 1988-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் மற்றும் இதர இடதுசாரி கட்சிகள் ஏற்படுத்திய வன்முறைக்கு முக்கிய காரணமாக இப்ராஹிம் திகழ்ந்தார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் தற்போது கூட குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இது குறித்து 2018ம் ஆண்டு கேள்வி எழுப்பப்பட்டபோது இக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad