20 லட்சம் கொடுத்தா பொணத்த தறேன்: கோவை மனு மருத்துவமனை கொரோனா பிஸ்னஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 3, 2021

20 லட்சம் கொடுத்தா பொணத்த தறேன்: கோவை மனு மருத்துவமனை கொரோனா பிஸ்னஸ்!

20 லட்சம் கொடுத்தா பொணத்த தறேன்: கோவை மனு மருத்துவமனை கொரோனா பிஸ்னஸ்!


ரூபாய் 16 லட்சம் கட்டணம் செலுத்தி கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவருக்கு அவரது குடும்பம் சிகிச்சை பெறச் செய்த நிலையில், இன்னும் ரூபாய் 4 லட்சம் தந்தால்தான் உடலைக் கொடுப்பேன் என மிகவும் அசிங்கமாக நடந்து கொண்ட தனியார் மருத்துவமனையின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உடலைப் பெற்றுக்கொடுத்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காதர். கொரோனா தொற்று காரணமாகச் சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 20 நாட்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கட்டணமாக ரூபாய் 20 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் விதித்திருந்தது. இதில் 16 லட்ச ரூபாயினை காதர் குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர். இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காதர் உயிரிழந்தார்.

16 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையிலும் மீதமுள்ள 4லட்ச ரூபாய் பணத்தைச் செலுத்தினால் மட்டுமே உடலைக் கொடுக்க முடியும் எனக் கூறி பிணத்தை வைத்து மனு என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் போக்கு காட்டியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கும் நிலையில், இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட மனு மருத்துவமனை நிர்வாகம் குறித்துச் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக், மாநகராட்சி அதிகாரிகளுக்கு காதரின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று நேரில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கும்படி காதரின் உறவினர்களுக்குச் சிறப்பு அதிகாரி சித்திக் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad