தமிழ்நாட்டில் 21 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா தினசரி பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 516628 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 487749 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7475 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 2645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 188023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 154978 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1506 பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 832 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 146374 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 137231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2079 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,63,928 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,80,28,680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று 33,161 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 19,65,939 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 434 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 27,005 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment