காஷ்மீரில் சட்டசபை தேர்தல்? வரும் 24ல் பிரதமர் மோடி ஆலோசனை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

காஷ்மீரில் சட்டசபை தேர்தல்? வரும் 24ல் பிரதமர் மோடி ஆலோசனை

காஷ்மீரில் சட்டசபை தேர்தல்? வரும் 24ல் பிரதமர் மோடி ஆலோசனை


ஜம்மு - காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்; சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தால், அதில் பங்கேற்க தயாராக இருப்பதாக, அரசியல் கட்சித் தலைவர்கள், தனித் தனியாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 24ம் தேதி அன்று, காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், அடுத்த வாரம் கூட்டம் நடக்கும் என்றும், முறையான அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முறையாக அழைப்பிதழ் கிடைத்துள்ளதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad