ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஷாக்; இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஷாக்; இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஷாக்; இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!


தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைகளுக்கு ரூ.4,000ம், 14 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதில் கடந்த மே மாதம் டோக்கன் வழங்கி அதன்மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 ரொக்கம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பு ஜூன் மாதம் இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் இலவச மளிகைத் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மளிகைத் தொகுப்பில் சில காலாவதியான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சிக்கு உட்பட்ட கொருக்கம்பேடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கவனித்த பொதுமக்கள் அந்த பொருட்கள் பயன்பாட்டிற்குரிய தேதியை கடந்து காலாவதியானதை கண்டறிந்துள்ளனர்.

ரேஷன் அட்டைதாரர்கள் செம ஷாக்

குறிப்பாக 14 வகை மளிகைப் பொருட்களில் ஒன்றான டீத்தூள் பாக்கெட்கள் 2019 அல்லது 2020ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்படி பார்த்தால் தற்போதைய 2021 ஜூன் மாதத்தில் டீத்தூள் பாக்கெட்கள் காலாவதியாகி விட்டன. இதைக் கூட கவனிக்காமல் அதிகாரிகள் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்துள்ளனர்.

அதிகாரிகளிடம் குவியும் புகார்கள்

சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் டீத்தூள் பாக்கெட்கள் காலாவதி தேதி நிறைவு பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் வேறு சில மளிகைப் பொருட்களும் காலாவதியாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad