வரும் 28 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க மாநில அரசு அனுமதி
டெல்லியில், வரும் 28-ம் தேதி முதல் 50 சதவீத நபர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்போது முழுமையாக குறைந்துள்ளது. முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்ததை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி முதல் 50 சதவீத நபர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருமண நிகழ்ச்சிகளில், 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,
இதற்கிடையே, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், வெறும் 85 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 9 பேர் பலியாகியுள்ளனர். இது இந்தாண்டின் குறைந்தபட்ச கொரோனா பாதிப்பு ஆகும்.
No comments:
Post a Comment