கர்ப்பிணிக்கு 28 வாரம்: தாய் சாப்பிடும் சுவையை வயிற்றில் குழந்தையும் ரசிக்குமாம், வேறு ஆச்சர்யம்!
கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் முதல் மாதத்தில் முதல் வாரத்தில் நீங்கள் இருக்கலாம். இந்த காலத்தில் சிலருக்கு பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.
மூன்றாவது மூன்று மாதங்கள் பொதுவாக கர்ப்பத்தின் 7 வது மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை நீடிக்கும். சிலரது உடல் நிலையை பொறுத்து பிரசவ வலி என்பது குறிப்பிட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னரும் நடக்கலாம். இந்த வாரத்தில் 2 வாரங்களுக்கு ஒருமுறை நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்த வாரத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் குழந்தை கண்களை சிமிட்டலாம். குழந்தையின் கண்பார்வை உருவாகும் காலம் இது. வயிற்றின் வழியாக நுழையும் மங்கலான ஒளியை பார்க்க முடிகிறது.குழந்தையின் சிறிய மூளை பில்லியன் கணக்கான நியூரான்களை உருவாக்கி வருகிறது. இந்த நேரத்தில் குழந்தை உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், கனவு காணுதல் போன்ற பணிகளை செய்ய முடியும்.
மூன்றாவது மூன்று மாதங்களில் உங்கள் குழந்தையின் எலும்புகள் குருத்தெலும்புகளிலிருந்து உருவாக்குகிறது. இது 7 மற்றும் 8 வது மாதங்களில் நிகழ்கிறது. குழந்தை வளர்ச்சிக்கு நிறைய கால்சியம் தேவைப்படுவதால் இந்த கட்டத்தில் கால்சியம் நிறைந்த உணவுகளை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
இந்த காலத்தில் குழந்தை ஐந்து புலன்களையும் உருவாக்கும். தொடு ஏற்பிகள் வளர்ச்சிக்குள்ளாகும். ஒளி உணர்வு, சாப்பிடுவதை ருசிப்பது, தாயின் குரலை கேட்டு மகிழ்வது போன்றவையும் அடங்கும். இவை எல்லாம் 31 வாரங்களுக்குள் நடந்துவிடும்.
No comments:
Post a Comment