தாராவியில் 2-வது நாளாக "ஜீரோ"வாகிய கொரோனா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 15, 2021

தாராவியில் 2-வது நாளாக "ஜீரோ"வாகிய கொரோனா

தாராவியில் 2-வது நாளாக "ஜீரோ"வாகிய கொரோனா



ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்றும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதல் அலையை விட, கொரோனா இரண்டாவது அலை மஹாராஷ்டிர மாநிலத்தை கடுமையாக தாக்கி விட்டது.

முழு ஊரடங்கை மஹாராஷ்டிர மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக, தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு சுமார் 70 ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில், 9 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 388 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 176 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தலைநகர் மும்பையில் மேலும் 575 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

தாராவியில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதிக்குப் பிறகு, கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாதது இதுவே முதன்முறை. கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதே தாராவியில் கொரோனா இரண்டாம் அலையின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad