ஊரடங்கில் நிறுத்திய லாரியை திருடி நம்பர் மாற்றி ஓட்டிய 3பேர்!
விருதுநகர் மாவட்டத்தில் இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது. வடக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை.
ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி மதுரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த 7ஆம் தேதி காலை நிறுத்தப்பட்டிருந்த லாரி காணாமல் போகியுள்ளது.
இதை அறிந்து மகேஸ்வரன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்திகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
லாரி திருட்டு சம்பந்தமாகச் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் சையது அலி(43), அப்துல் காசிம்(24), முகமது நசீம்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த லாரியை திருடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஷேக் சையது அலி என்பவரின் லாரியையும் கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment