சீரழிந்த நிலங்களை சீரமைக்க திட்டம்: ஐ.நா.,வில் பிரதமர் மோடி பேச்சு
நாட்டில் சீரழிந்த நிலங்களை, 2030ம் ஆண்டுக்குள் சீரமைக்கவும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மறுசீரமைப்பு செய்ய உதவவும், மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமேசானில் ஃபேஷன் & அப்ளையன்ஸ் 60%வரை தள்ளுபடி
நாட்டில் சீரழிந்த நிலங்களை, 2030ம் ஆண்டுக்குள் சீரமைக்கவும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மறுசீரமைப்பு செய்ய உதவவும், மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாலைவனமாக்கல், நிலங்கள் சீரழிதல் மற்றும் வறட்சி குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நிலை கூட்டத்தில், காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நிலங்கள் சீரழிவது, உலகின் மூன்றில் இரண்டு பங்கை பாதிக்கிறது. இதை கவனிக்காமல் கடந்து சென்றால், சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு, பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவை அடியோடு அழிந்துவிடும். எனவே, நிலங்கள் அழிக்கப்படுவதையும், அதன் வளங்கள் சுரண்டப்படுவதையும் நாம் உடனடியாக தடுத்தாக வேண்டும். இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க வேண்டும்.
நிலங்கள் அழிக்கப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முறையிடுவது பற்றி இந்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 30 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக நாட்டின் மொத்த பரப்பளவில் வனப்பகுதியில் பங்கு, நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது.
நிலங்கள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள், சீரழிந்த, 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை மீட்டு மறுசீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. மேலும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
No comments:
Post a Comment