டெல்லி கலவர வழக்கு: பல்கலை மாணவர்கள் 3 பேர் ஜாமினில் விடுதலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

டெல்லி கலவர வழக்கு: பல்கலை மாணவர்கள் 3 பேர் ஜாமினில் விடுதலை

டெல்லி கலவர வழக்கு: பல்கலை மாணவர்கள் 3 பேர் ஜாமினில் விடுதலை



குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு ஜாமின் கிடைத்ததையடுத்து அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகினர்.

கடந்த 2019ம் ஆண்டு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியர் நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் மூன்று பேர் மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையிட்டனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் முடிவில் மூவருக்கும் ஜாமின் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “மக்களுக்கு போராட்டம் நடத்தும் தார்மீக உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. போராட்டத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவுதான் வித்தியாசம். உபா சட்டம் என்பது பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். சாதாரண குற்றச் செயல்களுக்கு எல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியான போக்கு அல்ல” என்று விமர்சித்தனர்.

ஜாமின் வழங்கியதை அடுத்து, மாணவர்கள் மூன்று பேரும் திகார் சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகினர். இதற்கிடையே, ஜாமினை ரத்து செய்ய கோரி, டெல்லி போலீசார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad