கொரோனாவை ஜெயிச்சா ரூ.50 லட்சம் பரிசு; மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உச்சம் தொட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்த பட்டியலில் பல மாதங்களாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து நோய்த்தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வைரஸ் தொற்று வேகமாக பரவியது. உடனே உஷாரான மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் கிராம நிர்வாகங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டு ‘கொரோனா இல்லாத கிராமம்’ என்று பெயரெடுக்கும் கிராமங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 22 வெவ்வேறு விதமான அளவுகோல்களின் அடிப்படையில் கிராமங்கள் தரம் பிரிக்கப்படும். அதிகபட்சமாக 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் கிராமங்கள் வரிசைப்படுத்தப்படும். மொத்தமுள்ள 6 வருவாய் மண்டலங்களில்,
ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசாக 50 லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக 15 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 கிராமங்களுக்கும் ரூ.5.40 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். இந்த அறிவிப்பு கிராம நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து ஊராட்சிகளிலும் தட்டுப்பாடற்ற தினசரி
தடுப்பூசி முகாம்களை நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறுகையில், வெற்றி பெறும் கிராமங்களுக்கு பரிசுத் தொகைக்கு இணையாக ஊக்கத் தொகையும் கூடுதலாக]
இதனை அந்தந்த கிராமங்களின் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். இதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிசுத் தொகை என்ற திட்டத்தை பல்வேறு நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள் பரிசுத் திட்டத்தை பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment