தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது குறித்தும், சென்னை தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment