நிறைமாத கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர் தப்பினர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

நிறைமாத கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர் தப்பினர்

நிறைமாத கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர் தப்பினர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மனைவி சங்கீதா (வயது 22). இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்பு அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு 2:45 மணி அளவில் ஆம்புலன்ஸ் இளையனார் குப்பம் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில், ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கக்கலக்கத்தில் ஆம்புலன்சை அதிவேகமாக இயக்கி வந்ததால் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது


இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் சங்கீதா, இவரது மாமியார் ரோஸ் வயது 45, அத்தை வசந்தி வயது 50, பணியாளர் அமுதவல்லி ( 35), மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரத்குமார் வயது 30, 108 பணியாளர் லக்காதீர் வயது 25 ஆகியோர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad