மூன்றாம் அலை முகம்காட்டாது: வைரமுத்து ஆருடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

மூன்றாம் அலை முகம்காட்டாது: வைரமுத்து ஆருடம்!

மூன்றாம் அலை முகம்காட்டாது: வைரமுத்து ஆருடம்!

கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலை சற்றி குறையத் தொடங்கி பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியபோது, இரண்டாவது அலை இந்தியாவை தாக்கியது. நாள் தோறும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது

இந்த சூழலில் தற்போது இரண்டாவது அலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், கொரோனா 3ஆவது அலை நவம்பரில் தாக்கக் கூடும் எனவும், அது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிக அளவில் தாக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அச்சம் நிலவி வருகிறது.
அதேசமயம், செரோ விகிதம் குழந்தைகளிடம் அதிகமாக இருப்பதால், கொரோனாவின் 3ஆவது அலை ஏற்பட்டாலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “கொரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன்காரணமாக குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்கவேண்டும்” என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தடுப்பூசி கிடைத்தல், தயக்கத்தை உடைத்தல், தக்கவர்க்குச் செலுத்தல், தருணத்தில் முடித்தல், நான்கும் நடந்திடில் மூன்றாம் அலை முகம்காட்டாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad