ரோட்ல போறவன் மாதிரி பேசுகிறார் நிதி அமைச்சர், திமுகவின் மட்டமான சலுகை - கரு.நாகராஜன்
தமிழகத்தில் மாநில பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையேற்றார். தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மாநில இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை கடுமையாக விமர்சித்தார். முன்னதாக பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தது
அதன் மூலமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செலவு தொகையான 1200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என்றும் அரசு விளக்கம் அளித்தது. இந்த திட்டத்தை விமர்சித்த கரு.நாகராஜன் கூறுகையில், '' இருப்பதிலேயே மட்டமாக உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், அந்த குறிப்பிட்ட பேருந்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.
No comments:
Post a Comment