கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி!

கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி!


தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோயில் பணியாளர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றி வந்த கோயில் பணியாளர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அரசு முன்களப்பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்குவதைப் போல், உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் நிதியுதவி வழங்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது

அந்த கடிதத்தில், உதவித் தொகை வழங்கத் தேவைப்படும் முக்கிய ஆவணங்களாக, கோயில் பணியாளர்களின் பணி நியமன ஆணை நகல், கொரோனா காலத்தில் அந்த நபரை பணியமர்த்திய கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் நகல், உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ், கொரோனா தொற்றால் உயிரிழந்ததிற்கான மருத்துவர் மற்றும் மருத்துவமனை சான்றிதழ் ஆகியவை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad