ஊரடங்கு தளர்வு: மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து சேவை அனுமதி
தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதியோடு முடியவுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் வரும் ஜூலை 5ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை மூன்று வகையாக வகைப்படுத்தி தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, 2 வது வகைப்படி பிரிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேர தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்
No comments:
Post a Comment