வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி! சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி! சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி?

வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி! சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி?


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை மாதம் 5ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது.

அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்பட அனுமதி. குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad