தமிழ்நாட்டில் இன்று 7,817 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 455 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 529211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 519849 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8046 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 904 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 212493 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 199803 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1888 பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 154118 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 149996 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2307 பேர் பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment