முதல்வருடன் தமிழிசை சந்திப்பு.. ஸ்டாலின் கொடுத்த பரிசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

முதல்வருடன் தமிழிசை சந்திப்பு.. ஸ்டாலின் கொடுத்த பரிசு!

முதல்வருடன் தமிழிசை சந்திப்பு.. ஸ்டாலின் கொடுத்த பரிசு!



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

கொரோனா நெருக்கடி மிகுந்த காலத்தில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சிக்கு வந்தபின் தொடர்ந்து கொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிற்து. பலகட்டங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பும் குறைந்துள்ளது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலங்கானா ஆளுநராக பதவி வகித்து வருகிறார். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் (பொறுப்பு) அவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். மேலும், இந்த சந்திப்பின்போது தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.





No comments:

Post a Comment

Post Top Ad