ரூ.4000 உதவித் தொகை பெற்ற அர்ச்சகர்கள் புன்னகையுடன் திமுக ஆட்சியை வாழ்த்தினர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

ரூ.4000 உதவித் தொகை பெற்ற அர்ச்சகர்கள் புன்னகையுடன் திமுக ஆட்சியை வாழ்த்தினர்!

ரூ.4000 உதவித் தொகை பெற்ற அர்ச்சகர்கள் புன்னகையுடன் திமுக ஆட்சியை வாழ்த்தினர்!




கொரோனா நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாதச் சம்பளமின்றி திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதுகுறித்து கடந்த ஜூன் 2ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 4000 ரூபாயும், 10 கிலோ அரிசியும், 15 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும்” என்று தெரிவித்தது.

இந்த அறிவிப்பால் சுமார் 14,000 திருக்கோய்ல் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் உள்பட 439 பேருக்கு இன்று 4000 ரூபாய் உதவித் தொகையும், 10 கிலோ அரிசியும் 15 வகை மளிகைப் பொருள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

உதவித் தொகையும், மளிகைப் பொருள் தொகுப்பும் பெற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் திமுக ஆட்சியை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் சென்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad