பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 15, 2021

பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்!


கொரோனா பரவல் 36ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 12ஆயிரத்துக்கும் கீழ் ஒரு மாதத்துக்குள் குறைந்துள்ளதால் விரைவில் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங்களிலும் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இரண்டாவது அலை ஆடி அடங்கப் போகும் சூழல் உருவாகிவிட்டது.

இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகி விட்டால் ஜூலையில் இல்லாவிட்டாலும் ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாதிப்பு குறைந்தபின்னர் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலினே தெரிவித்துள்ளார்.

அப்படியானால் விரைவில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலம் கனிந்துவிட்டதா என மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் விசாரித்தோம். பாதிப்பு குறைந்தாலும் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர்.


கொரோனாவின் முதல் அலை முடிவுக்கு வந்தபோது பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. ஒரு சில வாரத்திலேயே இரண்டாவது அலை ஆரம்பித்து முதலில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளை மூடியது. பின்னர் தேர்வுகளை ரத்து செய்தது.

இரண்டாவது அலையின் வீரியத்தை அனைவருமே பார்த்தோம். அது பெரும்பாலும் இளைஞர்கள், நடுத்தர வயதுடையோரை அதிகம் பாதித்தது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

*குழந்தைகள் நல மருத்துவர்கள் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனையிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

*ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஐசியு வசதி படுக்கைகளும் ஏற்படுத்திட வேண்டும்.

*குழந்தைகள் சிறப்பு மருத்துவரை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

*குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் பொதுமருத்துவர்கள் மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad