அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பள்ளிக் கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து புதிய பாதிப்புகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில்,
புதிய கல்வியாண்டு தொடக்கம்
மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். விரைவில் புதிய கல்வியாண்டிற்கான பாடங்களை ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமும் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் சில அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment