உலகத்துக்கே பெரிய ஆபத்து.. அச்சுறுத்தும் புதிய வைரஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

உலகத்துக்கே பெரிய ஆபத்து.. அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

உலகத்துக்கே பெரிய ஆபத்து.. அச்சுறுத்தும் புதிய வைரஸ்!


உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடி இன்னும் குறையவில்லை. இதற்கிடையே, சில நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி கூடுதல் தலைவலியை கொடுத்து வருகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா உள்நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவிவிட்டது. இந்த வைரஸுக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்டாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் கடுமையாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் உலகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய உருமாறிய வைரஸாக மாறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படவிருந்த நிலையில் டெல்டா வைரஸ் அங்கும் பரவத் தொடங்கியது. இதனால் பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்தது.

சிங்கப்பூரிலும் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில், டெல்டா வைரஸ் உலகளவில் கொரோனா பாதிப்பில் ஆதிக்கம் செலுத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad