தாமதப்படுத்தாம உடனே வழங்குக! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

தாமதப்படுத்தாம உடனே வழங்குக! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்

தாமதப்படுத்தாம உடனே வழங்குக! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்


கொரோனா தொற்றால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளிகளின் பெயர், முகவரி, வயது மற்றும் பிற விவரங்களை முறையாக பதிவேற்றப்படுதில்லை. இதனால் நோயாளிகள் இறக்க நேரிடும் போது மரண சான்றிதழ்கள் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்களைப் பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அரசு பல முறை அறிவுறுத்தியும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, இறந்தவரின் சரியான விவரங்களை பதிவேற்றும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதளை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad