வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 7, 2021

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள்

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள்

இந்த கால கட்டங்களில் அமேசான் மூலமாக புத்தகங்களை வெளியிடுதல் மற்றும் விற்பனை(sales) செய்வதற்கு மிகவும் எளிதாகவும், விலைக்கு தகுந்தாற்போலவும் eBook பயன்படுகிறது.

eBook மூலமாக புத்தகங்களை விற்பனை மற்றும் தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு 2 வழிகள் இருக்கின்றது. முதலில் eBook உருவாக்கிய பின்  அதனை ஆன்லைன்(Online) மூலம் சில்லறை விற்பனையாளர்கள்(Book Retailer) Amazon, Barnes and Noble, iBooks மற்றும் பல ஆப்ஸ்(Apps) கொண்டு விற்பனை செய்யலாம்.

அடுத்ததாக eBook உருவாக்கம் அல்லது வீட்டில் இருந்தபடியே தனியாக வெப்சைட் மூலம் வீடியோ பதிவுகள் கொண்டும், கோர்ஸ் மூலமாகவும் விற்பனை செய்து இந்த தொழில் மூலம் அதிக லாபம் பெறலாம்.

Homemade business ideas – Social Media Management Business:
Homemade Business Ideas
home made business in tamil: இன்டர்நெட் மூலம் தொழில் மற்றும் சேவை செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. மாற்று வழியில் தொழில் செய்யாமல் ஒரே வழியில் தொழில் செய்பவர்கள் சமூக வலைத்தளங்கள்(Social Media) மூலம் விளம்பரம் செய்து லாபம் ஈட்டுகின்றனர்.

சமூக வலைத்தளம் மேலாளரின் உதவிகளை கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்கி அதை சுற்றியுள்ள வாடிக்கையாளரின் தேவைகள் தெரிந்துகொண்டு எளிதாக விற்பனை செய்யலாம்.


 
இந்த சமூக வலைதளத்தின் மேலாளராக பணிபுரிய சமூக வலைதளத்தின் புரிதல் மிகவும் அவசியம். இந்த Social Media பிசினெஸ்ஸை வீட்டில் இருந்து தாராளமாய் செய்யலாம்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் – eCommerce Business:
Homemade Business Ideas

 
ஒரு காலத்தில் ஆன்லைன் பிசினஸ் செய்வது மிகவும் சவாலாக இருந்தது. இப்போது இருக்கின்ற காலத்தில் பொருள்களை வெளியில் வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக வாங்கி கொள்கிறார்கள்.

பெரிதும் அதிலேயே நிறைய பணத்தை செலவழிக்கின்றனர். புதிதாக ஒரு பொருளை(product) வாங்கி விற்பனை செய்ய நாமாக ஒரு website அல்லது பிற தளங்கள் அதாவது அமேசான்(Amazon), இபே(eBay) மூலம் விற்பனை செய்யலாம்.

உதாரணத்திற்கு உங்களிடம் நிலையான Access கொண்டு குழந்தைகளுக்கு தேவையான தரமான ஆடைகளை விற்பதற்கு eBay- வே  சிறந்தது.

நகைகள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்வதற்கு Etsy மூலம் இந்த தொழிலை தாராளமாய் செய்யலாம்.

Homemade business ideas – நாம் பயன்படுத்திய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருமானம் பெறலாம்:-
ebay
இணையதள ஷாப்பிங் உலகில் இபே மற்றும் அமேசான் இணையதளத்திற்கு என்றும் தனிச் சிறப்பு உண்டு. வெறும் ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமின்றி நம் வீட்டில் உள்ள தேவையற்ற மற்றும் பழைய பொருட்களை இந்த இணையதளம் மூலம் விற்பனை செய்து வீட்டில் இருந்தபடியே வருமானம் பெறலாம்.

உதாரணத்திற்கு தங்களிடம் உள்ள புத்தகங்கள், நகைகள், திருமண ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செயலாம். இருப்பின் அவற்றின் முழுமையான விவரங்களை சரியாக உள்ளிட்ட வேண்டும். அதாவது தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை புகைப்படம் எடுத்து அதன் விலை, தரம் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.

தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் விற்பனையானால் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறலாம். இந்த ஆன்லைன் தொழிலை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் இருப்பினும் இதற்கு seller account-ஐ open செய்துகொள்ள வேண்டும்.

Business ideas in tamil – சொந்தமாக website ஆரம்பிக்கலாம்:
Microwork 
வீட்டில் இருந்தபடியே புதிதாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதன் மூலம் சம்பாதிக்கலாம். சொந்தமாக வெப்சைட் ஆரம்பிப்பதற்கு இரண்டு tools உள்ளது அவற்றில் ஒன்று Blogger மற்றொண்டு wordpress என இரண்டு tools இருக்கிறது.

இவற்றில் blogger account என்பது கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலவச சேவையாகும். இந்த blogger account-ஐ இலவசமாக ஓபன் செய்து, இவற்றில் தினமும் ஏதாவது விஷயங்களை பதிவு செய்யலாம். அதாவது தங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்பு, அழகு குறிப்பு, சினிமா, அரசியல் போன்றவற்றை பற்றிய செய்திகளையும் இந்த account-யில் பதிவு செய்யலாம்.

இந்த Blogger account-யில் தினமும் பதிவு செய்வதினால் கூகுளில் தங்களது பதிவு (post) ranking ஆகும். rank செய்யப்பட்ட உங்கள் பதிவை பார்க்கும் பயனர்கள் மூலம் தங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் வழங்கும்.

வீட்டில் இருந்தபடியே இதன் மூலம் 1000 ரூபாய் முதல் லட்சரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம்.

Online business ideas in tamil – வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில்
website 
மைக்ரோவொர்க் என்பது ஃப்ரீலான்சிங் செய்யும் அளவுக்கு வீட்டில் இருந்து செய்யும் தொழில் இல்லை, இருந்தாலும்  நிறுவனம் தரும் வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்து தர தகுதியானவர்களை வரவேற்கின்றது. மைக்ரோவொர்க் சிறிய வருமானத்திற்கு நிறைய வேலை செய்வது போல் தோன்றினாலும் அவர்கள் கூறும் வேலைகளை செய்து கொடுத்தால் ஒரு மாதத்திற்கு $1,000 முதல் $ 2,000 வரை சம்பாதிக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன.

மைக்ரோவொர்க் என்றால் என்ன? 
சிறிய வேலைகளை, குறைந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே செய்து கொடுப்பதாகும் அதாவது Researching, Proofreading, Writing, and Data entry போன்ற வேலைகளை செய்து கொடுப்பதாகும். எனவே நிறுவனம் இதற்கு தகுதியானவர்களை வரவேற்கின்றது.

எனவே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க நினைப்பவர்களுக்காகவே பல நிறுவனங்களின் website உள்ளது. எனவே கூகுளில் Freelance work என்று Search செய்து பார்த்து அந்த நிறுவனங்களுடன் இணைத்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் 1 / Homemade Business Ideas – Computer Tutor or Trainer:
இன்றைய கால கட்டங்களில் கணினி பயன்பாடே மிகவும் முதன்மையாக விளங்குகிறது. அதிலும் நாம் டிஜிட்டல் (Digital) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் வசதி கொண்டு தனியாக செயல்படும் நபருக்கோ அல்லது குழுமமாக செயல்படுவோருக்கும் கணினி பயன்பாடு மற்றும் இன்டர்நெட் பற்றியும்(Home-Based Computer Tutor) சொல்லி தருகிறார்கள்.

தற்போதைய காலங்களில் வகுப்புகள் அனைத்தும் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மாறுபட்டவர்கள் அவர்கள் குழந்தைகளாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருப்பார்கள் அவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்கிறார்கள்.

வீட்டில் இருந்து செய்யும் சிறுதொழிலில் கணினி மூலம் முதன்மையாக Computer Tutor or Trainer தொழில் சிறந்து விளங்குகிறது. வீட்டில் இருந்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் இதை தாராளமாய் தொடங்கலாம்.

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் 2 / Home Based Business Ideas – Computer Repair:

கணினி பழுதுபார்த்தல் (Computer Repair) தொழிலில் நன்றாக கைதேர்ந்தவர்கள், கணினியை உற்று நோக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கணினியின் பிரச்சனை என்னவென்று நன்கு அறிவார்கள். அந்த பழுதை அவர்களால் மட்டுமே சரி செய்யமுடியும்.

செலவிற்கு ஏற்றாற்போல் அவர்களால் மட்டுமே (Hardware/Software) சுத்தம் செய்தோ அல்லது வேற பகுதிகளை மாற்றித்தரவோ இயலும்.

நாம் வீட்டில் இருந்தபடி வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது நமது வாடிக்கையாளர்களின் கணினியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவர்களின் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று நாம் பழுது நீக்கி தரலாம்.

வீட்டில் இருந்தே செய்யும் தொழிலின் அதிக லாபமும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது கணினி பழுதுபார்த்தல் தொழில். வீட்டில் இருந்து இந்த தொழில் மூலம் நிறையவே லாபத்தை பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad