சிமென்ட் விலை குறைஞ்சிருக்கு... சட்டமன்றத்தில் அமைச்சர் கெத்து பேச்சு!
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் தற்போது சிமெண்ட் விலை மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, " சிமென்ட் முட்டை ஒன்று 490 ரூபாய் என விற்ற விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிமென்ட் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தற்போது அதன் விலை ரூபாய் 460 ஆக குறைத்துள்ளது. ஆனாலும் அதன் விலையை மேலும் குறைக்க வற்புறுத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் விலையை குறைக்கவும் அரசு எடுத்த முயற்சி காரணமாக அதன் விலையும் குறைக்கபட்டுள்ளது
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் தெரிவித்தார்
No comments:
Post a Comment