ஓபனர்கள் காலி…இந்தியா கோப்பையை தட்டி தூக்குமா? கோலி கையில் முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 22, 2021

ஓபனர்கள் காலி…இந்தியா கோப்பையை தட்டி தூக்குமா? கோலி கையில் முடிவு!

ஓபனர்கள் காலி…இந்தியா கோப்பையை தட்டி தூக்குமா? கோலி கையில் முடிவு

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 64/2 ரன்கள் சேர்த்து, 32 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. ரோஹித், கில் ஆட்டமிழந்துள்ளனர். நாளை 6ஆவது நாள் ஆட்டம் (ரிசர்வ் டே) நடைபெறும்.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 217/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

அதன்பிறகு தங்களின் முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி துவக்கத்தில் நிதானமாக விளையாடியது. ஓபனர்கள் கான்வே, லதாம் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். தொடர்ந்து மற்றவர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இறுதியில் வில்லியம்சன் (49), டிம் சௌதீ (30) ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்ததால், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249/10 அடித்து, 
32 ரன்கள் முன்னிலை பெற்றது.
32 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா (30), ஷுப்மன் கில் (8) இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியுள்ளனர். தற்போது புஜாரா 12* (55), விராட் கோலி 8* (12) களத்தில் இருக்கிறார்கள். ஐந்தாவது நாள் முடிவுவரை இந்திய அணி 64/2 ரன்கள் சேர்த்து 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad