ஷட்டரை உடைத்து டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 22, 2021

ஷட்டரை உடைத்து டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு!

ஷட்டரை உடைத்து டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு!


திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த மதுபான கடையில் வழக்கம்போல் நேற்று இரவு கடை பணியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணிகளை முடித்துவிட்டு கடையை பூட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார்

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கிருஷ்ணமூர்த்தி கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தார். பின்பு உள்ளே சென்று பார்த்த பொழுது மதுபானங்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி,
டாஸ்மாக் அதிகாரிகளின் ஆலோசனையோடு ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடையை நேரில் ஆய்வு செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad