இன்னும் சொல்லப்போனால், இன்று பெரும்பாலான ஆப்ஸ் மற்றும் சேவைகள் உங்கள் Google அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி உள்நுழைவதற்கான, அதாவது லாக்-இன் செய்வதற்கான விருப்பத்தை வழங்குகின்றன.
முன்னரே குறிப்பிட்டபடி, இது மிகவும் சுலபமான மாறட்டும் வசதியான வழியாக இருப்பதால், நம்மில் பெரும்பாலானோர்கள் எப்போதுமே இந்த விருப்பத்தை எடுக்கவே முனைகிறோம்
இதெல்லாம் ஒரு மேட்டர்-ஆ? இதுல என்ன சிக்கல் இருக்கு? என்று நீங்கள் நினைத்தால்.. உங்கள் எண்ணம் மிகவும் தவறு!
நீங்கள் உங்கள் Google அக்கவுண்ட்டை எதாவது ஒரு மூன்றாம் தரப்பு சேவையுடனும் இணைத்ததும், நீங்கள் அதைப் பயன்படுத்தாவிட்டாலும் கூட, உங்கள் Google அக்கவுண்ட் அந்த சேவையுடன் பகிரப்படுகிறது.
எனவே நீங்கள் இனிமேல் பயன்படுத்தாத, அல்லது பயன்படுத்த விரும்பாத சேவைக்கும் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்கும் உள்ள "உறவை" அறுத்து விடுவது நல்லது. அதாவது Link செய்தீர்கள் அல்லவா? அதை Unlink செய்ய வேண்டும் என்று அர்த்தம்!
No comments:
Post a Comment