சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி!

சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி!


நியாயவிலைக்கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து, குடும்ப அட்டை மற்றும் நிவாரண தொகை உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.


டிரெண்டிங்
எல்லையில் பதற்றம்
ஊரடங்கில் தளர்வுகள்
திருப்பதி சர்ப்ரைஸ்
கொரோனா 3வது அலை
Tamil NewsLatest NewsSalemPhysically Challenged Means Ration Card Was Misused By Salem Ration Shop Keeper For Past Years 2 Years Big Scam Came To Light
சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி!
Akash G | Samayam TamilUpdated: 21 Jun 2021, 11:24:00 PM

2
1
5
Subscribe

சேலம் அருகே மாற்றுத்திறனாளி குடும்ப அட்டையை 2 ஆண்டுகளாக வழங்காமல், நிவாரண தொகை மற்றும் பொருட்கள் பயன்படுத்தி வரும் நியாய விலை கடை ஊழியரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

சேலம் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைகளை உரிமையாளர்களிடம் கொடுக்காமல் மோசடி!
நியாயவிலைக்கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து, குடும்ப அட்டை மற்றும் நிவாரண தொகை உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.


அமேசான் ஃபேஷன் சேல்ஸ் ஜூன் 19 முதல் 23 வரை
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத்திறனாளி. இவர் முடி திருத்தம் தொழில் செய்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.

நீண்ட நாட்களாக இவருக்கு குடும்ப அட்டை கிடைக்காமலிருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய குடும்ப அட்டை வேண்டும் என்றும் அதை வழங்கும்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார்.

பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில் நியாய விலை கடைக்குச் சென்று கேட்டபோது, குடும்ப அட்டை வரவில்லை எனக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மீண்டும் ஆன்லைன் மூலமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் முயன்றனர். அப்போது, ஏற்கனவே குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து இது தொடர்பாகச் சேலம் தெற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் கேட்டபோது 2 ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்பட்டு நியாய விலை கடைக்கு அனுப்பிவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.


பின்னர் மாரியப்பனின் கைப்பேசி எண்ணிற்கு குடும்ப அட்டை வந்ததற்கான ஒப்புதல் குறுஞ்செய்தியும் கிடைத்துள்ளது. அதேவேளை குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட கொரோனா பேரிடர் கால நிவாரண தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறப்பட்டதாக அவ்வப்போது குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளியான மாரியப்பன் நியாயவிலைக்கடையில் சென்று அந்த குறுஞ்செய்தியைக் காண்பித்து தனக்கு வழங்கவேண்டிய பொருட்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் மாரியப்பனுக்கு நிவாரண தொகை மற்றும் அரசு வழங்கிய

அரிசி உள்ளிட்ட தொகுப்பினை கூட கொடுக்காமல் மிரட்டி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே மாற்றுத்திறனாளி மாரியப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்குக் கிடைக்கவேண்டிய பலன்களைப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad