அவரை சந்திக்க விரும்பல! ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி கறார் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

அவரை சந்திக்க விரும்பல! ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி கறார்

அவரை சந்திக்க விரும்பல! ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி கறார்



அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என, ஈரான் அதிபராக பதவி ஏற்க உள்ள இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.


ஈரான் அதிபர் ஹசன் ரோஹானி, அதிபர் பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில், 60 வயதான இப்ராஹிம் ரைசி, இஸ்லாமிய குடியரசு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் எதிர்ப்பை சம்பாதித்து வரும் ஈரான், பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர, இப்ராஹிம் சிறந்த தலைவராக விளங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி வருகின்றனர்.

ஈரானின் உயரிய தலைவர் அயோடெல்லா அல் கமேனி, அடுத்த மாதம் தனது 82-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். வயது மூப்பு காரணமாக, இவர் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஈரான் அதிபராக பதவி ஏற்க இருக்கும் இப்ராஹிம் ரைசி, கமேனியை அடுத்து ஈரானின் உயரிய தலைவராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி, அதன் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க, இப்ராஹிம் ரைசி பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். ஈரான் அணு ஆயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், புதிதாக ஈரான் அதிபராக பதவி ஏற்கவுள்ள இப்ராஹிம் ரைசி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவில் இப்ராஹிம் ரைசி நுழைய, ஜோ பைடன் அரசு தடை விதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தடை விதிக்கப்படுமானால் அமெரிக்க அரசால் தடை விதிக்கப்பட்ட முதல் ஈரான் அதிபர் என்கிற பெயரை இப்ராஹிம் ரைசி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad