ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க! ராகுலுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க! ராகுலுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க! ராகுலுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்



ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, மத்திய அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே மாதியான விலை இருக்க வேண்டும், மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது.
இதையடுத்து இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும் தடு்ப்பூசி விலை விவரம், பற்றாக்குறை போன்ற விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், பீஹார் மாநிலம் பாட்னாவில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர் இன்னமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் இதனை அவருக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்திக்கு கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad