கொரோனா ஊசியால் நெஞ்சுவலி: பார்க்கமுடியாது என கொல்ல பார்த்த தேனி டாக்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

கொரோனா ஊசியால் நெஞ்சுவலி: பார்க்கமுடியாது என கொல்ல பார்த்த தேனி டாக்டர்!

கொரோனா ஊசியால் நெஞ்சுவலி: பார்க்கமுடியாது என கொல்ல பார்த்த தேனி டாக்டர்!



தேனி மாவட்டத்தில் மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பெரியகுளம் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பதில் அலட்சியம் செய்வதால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் என்பது குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம் பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். அவர் நேற்று காலை கொரோனா தடுப்பு ஊசி செய்துகொண்ட நிலையில் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனது உறவினர் உதவியுடன் ஈஸ்வரன் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை சென்றுள்ளார்.

அப்போது பணியிலிருந்த மருத்துவர்கள் ஈஸ்வரனை பரிசோதித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஈஸ்வரனின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வசதி செய்தி தர மருத்துவரிடம் முறையிட்டுள்ளனர். இதற்கிடையே மருத்துவர் ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஆகும் உங்களுடைய இருசக்கர வாகனத்திலேயே நோயாளியைக் கொண்டு செல்லுங்கள் என அலட்சியப் போக்குடன் கூறியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அதேவேளை 2 மணி நேரத்திற்கு பின்புதான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின்புதான் ஈஸ்வரனை உயர் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தராமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட மருத்துவரைப் பணி நீக்கம் செய்யக்கோரி நோயாளியின் உறவினர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கொடுக்காமல், வருகின்ற நோயாளிகள் அனைவரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைப்பதாகவும், நோயாளிகளின் உயிருடன் விளையாடும் மருத்துவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad