படிச்சவர் மாதிரி இருக்கிங்க.. செல்லூர் ராஜுவை நோஸ் கட் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாணவரணி கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “அமைச்சர் செந்தில் பாலாஜியின் சமீபத்திய பேச்சால் உடகங்கள், சமூக வலைதளங்களில் இருந்து நான் தப்பித்தேன்.
திமுக அமைச்சர்கள் என்னை விஞ்ஞானி என கூறுவார்கள். ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அணிலை கண்டுபிடித்துள்ளார். அவர்தான் உண்மையான விஞ்ஞானி.
அதிமுக ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின் மற்றும் இரும்புக் கம்பிகளில் செல்கின்றன. இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு ஆஸ்கார் விருதும், நோபல் பரிசும் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment