இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்
பொதுவாக இயர் போனை மாட்டி கொண்டு 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் அதிகபட்சம் பேச வேண்டும். அதற்கு மேல் நாம் காதில் இயர் போனை மாட்டி கொண்டிருந்தால், காதில் இருக்கும் கார்டிலெஜ் என்னும் மென்மையான எலும்பை இந்த இயர் போன் அழுத்த தொடங்கும்.
அத்துடன் தொடர்ந்து ஒலி அலைவரிசை வெவ்வேறு ஒளியளவில் காதுக்குள் அடைவதால் காதில் ட்ரம் எனப்படும் சவ்வு கிழிவதற்கோ அல்லது தளர்வடைவதற்க்கோ காரணமாகிறது.
மேலும் காதுகளில் உள்ள மென்மையான பகுதிகளில் வீக்கங்களோ, சிறிய கொப்பளங்களோ ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் தான் பயன்படுத்தியதை, மற்றவருடன் பகிரக் கூடாது. அதனால் கூட, பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல், 10 நிமிடம் இடைவெளி விட வேண்டும்.
No comments:
Post a Comment