காலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்!
பாஜக தேசிய துணைத் தலைவரான முகுல் ராய் கடந்த 2017ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில், முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க முன்னாள் அமைச்சரும், தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவருமான ரஜிப் பேனர்ஜி இன்று திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷை நேரில் சந்தித்தார்.
திரிணமூல் காங்கிரஸில் முகுல் ராய் இணைந்து ஒருசில தினங்களே ஆகியுள்ள நிலையில், ரஜிப் பேனர்ஜியும் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், இதில் அரசியல் தொடர்பாக பேசவில்லை எனவும் இருவரும் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து ரஜிப் பேனர்ஜி, “அருகில் இருக்கும் எனது உறவினரை சந்திக்க வந்தேன். குணால் கோஷ் எனக்கு சகோதரரை போன்றவர். அதனால் அவரை சந்திக்க வந்தேன். நாங்கள் அரசியல் பேசவில்லை” என்று தெரிவித்துவிட்டார்.
எனினும், மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு ரஜிப் பேனர்ஜி வெளிப்படையாக விமர்சனம் செய்தார். எனவே, அவர் திரிணமூல் காங்கிரஸுக்கு மீண்டும் செல்ல வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment