அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் 6வது தெரு பகுதியில், மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.25 மணியளவில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மீது, அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், மர்ம நபர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் மர்ம நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். இந்த தாக்குதலில், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 13 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றது யார் என்பது குறித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபான விடுதிக்கு வந்தவர்களில் நண்பர்கள் சிலருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad