ஊரடங்கு தளர்வு.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. கொரோனா சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், தளர்த்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை தொழில் மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வார இறுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும். ஜூன் 18ஆம் தேதி இரவு 7 மனி முதல் ஜூன் 21ஆம் தேதி காலை 5 மை வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதுபோக தினமும் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
தளர்வுகளின்படி, அத்தியாவசிய பொருள் விநியோகிக்கும் கடைகள் மதியம் 2 மணி வரை இயங்கலாம். கட்டுமான துறை சார்ந்த பணிகள், வியாபாரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகள் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி. உணவகங்களில் பார்சல் மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் 9,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 2,454 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். மேலும் 144 பேர் பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment