லட்சத்தீவில் திடீர் ட்விஸ்ட்.. ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா!
லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஆய்ஷா சுல்தானா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியபோது, லட்சத்தீவில் கொரோனாவை பரப்புவதற்கு மத்திய அரசு பயோ ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
இவ்விவகாரம் குறித்து லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் பதிவு செய்த புகாரின் அடிப்படையில், ஆய்ஷா சுல்தானா மீது காவல்துறையினர் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.
அரசை விமர்சித்ததற்கு தேச துரோக வழக்கு பதிவு செய்ததற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆய்ஷாவுக்கு ஆதரவாக பல்வேறு பாஜக தலைவர்களே ராஜினாமா செய்துள்ளனர்.
லட்சத்தீவு பாஜக பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது முள்ளிப்புழா உள்பட மொத்தம் 15 பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர். லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதரிடம் அவர்கள் வழங்கியுள்ள கடிதத்தில், ஆய்ஷா மீது நியாயமற்ற பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல் மக்களுக்கும், ஜனநாயகத்தும் விரோதமாக செயல்பட்டு மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment