சைலன்ட் ஆக அறிமுகமான Jio ரூ.127, ரூ.247 பிளான்; இனி ரூ.444, ரூ.599 எதுக்கு?
ரூ.127 மற்றும் ரூ.247 பிளான்களை மட்டுமல்ல, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக ஐந்து புதிய திட்டங்களை சைலன்ட் ஆக அறிவித்துள்ளது.
இந்த ஐந்து திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், இவைகள் அனைத்துமே டேட்டா நன்மையில் எந்தவொரு FUP வரம்பையும் கொண்டு பயனரைக் கட்டுப்படுத்தாது.
அதாவது இந்தத் திட்டங்களுடன் பயனர் எந்த அளவிலான டேட்டாவைப் பெற்றாலும், அவர் அதை அனைத்தையும் ஒரே நாளில் கூட செலவிடலாம் அல்லது திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை பொறுமையாக செலவிடலாம்.
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டா நண்மையை ஒருவரை அவரது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து பயன்படுத்தலாம்.
ஜியோ அறிமுகம் செய்துள்ள 5 புதிய திட்டங்கள் ஆனது ரூ.127 முதல் ரூ.2,397 வரை நீள்கிறது. மேலும் இவைகள் "வழக்கம் போல" குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால செல்லுபடியாகும் நன்மையை கொண்டுள்ளன; இதன் மூலம் எப்போதுமே அனைவருக்கும் தேவையான ஒரு திட்டம் இருப்பதை ஜியோ உறுதி செய்துள்ளது.
இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை, என்னென்ன வேலிடிட்டியை கொண்டு வருகிறது? என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
FUP கட்டுப்பாடுகள் இல்லாமல் வரும் ரிலையன்ஸ் ஜியோவின் ஐந்து புதிய திட்டங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள 5 புதிய பிளான்களில் முதலில் உள்ளது ரூ.127 ப்ரீபெயிட் பிளான் ஆகும். இந்த திட்டம் பயனர்களுக்கு 12 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது மற்றும் 15 நாட்கள் செல்லுபடியாகும். இதனுடன் ரூ.247, ரூ.447, ரூ.597, ரூ.2,397 போன்ற திட்டங்களும் உள்ளது.
ரூ.127-க்கு அடுத்தபடியாக உள்ள ரூ.247 திட்டம் 30 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் 25 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது.
ரூ.447 திட்டமானது 60 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, ரூ.597 திட்டம் 75 ஜிபி டேட்டாவுடன் 90 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வருகிறது மற்றும் கடைசியாக உள்ள ரூ.2,397 திட்டமானது 365 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 365 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வருகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அனைத்து திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு பயனர் "உட்கொள்ளக்கூடிய" டேட்டா அளவில் எந்தவொரு FUP கட்டுப்பாடுகளும் இல்லாமல் வருகின்றன.
மேற்குறிப்பிட்ட திட்டங்கள் டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ட்ரூலிஅன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் வழங்கும். உடன் பயனர்கள் பல வகையான ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவையும் பெறுவார்கள். மேலும், ஒவ்வொரு திட்டமும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.
ஆக இனிமேல் தினசரி FUP டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் குறிப்பிட்ட நாளில் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்யும் நிலை ஏற்பாடாது; மெயின் பிளான் உடன் இந்த 5 பிளான்களில் ஒன்றை (உங்கள் தேவைக்கு ஏற்றபடி) ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டால், டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் பதற்றப்பட தேவையில்லை.
ஏற்ற இறக்கமான டேட்டாத் தேவைகளைக் கொண்ட பயனர்கள் இந்த புதிய ஜியோ திட்டங்களை பாராட்டாமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அவர்களுக்கு வாய்ஸ் கால் அழைப்பு நன்மையும் இருக்கும், எஸ்எம்எஸ் நன்மைளும் இருக்கும், அதே சமயம் டேட்டாவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
No comments:
Post a Comment