இன்னும் 2 மாசம் தான்; சசிகலாவிற்கு பெரிய சிக்கல் - அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

இன்னும் 2 மாசம் தான்; சசிகலாவிற்கு பெரிய சிக்கல் - அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து!

இன்னும் 2 மாசம் தான்; சசிகலாவிற்கு பெரிய சிக்கல் - அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சசிகலாவிற்கு சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, பரப்பன அக்ரஹார சிறைக்குள் திடீர் சோதனை மேற்கொண்டார். அதில், சசிகலாவிற்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

சிறை விதிமுறைப்படி இது தவறு. இதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இவர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. எனவே ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. ஆனால் அதன்பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் சசிகலா விடுதலையாகி விட்டார். அதிமுகவிற்கு தலைமையேற்க வருவேன் என்று தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணையின் நிலை

குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் சசிகலா மீதான குற்றச்சாட்டு பற்றி ஊழல் தடுப்பு படை நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்பிக்க 4 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2 மாதங்கள் மட்டும் அவகாசம் வழங்கினர். அதற்குள் முழு விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு சசிகலாவிற்கு எதிராக திரும்பும்பட்சத்தில் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்படக்கூடும். அதிமுகவிற்கு தலைமையேற்க கட்டி வைத்த கோட்டைகள் அனைத்தும் நொறுங்கிபோடும். எனவே இதனை எதிர்கொள்ள சசிகலா தரப்பு முன்கூட்டியே வியூகங்கள் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad