''ஒரு பெண்ணாக அதிர்ச்சியடைந்தேன்''... வக்கீலின் ஆணவ பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம்...
ஆனால், அதிகார திமிரில் இருக்கும் வசதி படைத்த சிலரோ, கட்டுப்பாடுகள் எங்களுக்கில்லை என்ற மமதையில் விலையுயர்ந்த காரில் ஊர் சுற்றி வருகின்றனர். அவ்வாறு சுற்றுபவர்கள் போலீசில் சிக்கினால், தங்களது பின்புலத்தை சொல்லி தப்பிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே காரில் வந்த பெண்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். எங்கே செல்கிறீர்கள் என்றும், முகக்கவசம் அணியவில்லை அதற்கு அபராதம் செலுத்துங்கள் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, அப்பெண்ணில் ஒருவர், போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். 'நான் அட்வகேட்டு, உன் யூனிபார்ம கழட்ட வச்சுடுவேன், ஏய் மயிறு'' என்று முகம் சுளிக்கும் வகையில் திட்டி முன்களப்பணியாளர்களான போலீசாரின் மனதை புண்பட வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடிய சமூக ஊடகங்களில் வெளியாகியதையடுத்து, அப்பெண்ணின் மீது சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல்நிலையத்தில் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒரு பெண்ணாகவும், வழக்கறிஞராகவும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்'' என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment