முதுமலை முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

முதுமலை முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை..!

முதுமலை முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை..!

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அண்மையில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதையடுத்து தொற்று பாதித்துள்ள மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் பூங்காவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சிங்கங்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கொரோனா இரண்டாவது அலையில் தமிழ்நாடு அதிக அளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. படுக்கை வசதி இல்லாமை , ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல இக்கட்டான சூழலில் நடுவே தமிழக அரசு நோய் தீவிரத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் வன விலங்குகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பது வன துறையினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விலங்குகளுக்கு கொரோனா எந்த வழியில் பரவியிருக்கும் என்ற கேள்விகளுக்கு வினா காண அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வண்டலூரில் 11 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் முதுமலை, டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவக்குழு நாளை உதகை செல்வதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad