தடுப்பூசியால் ஆண்மை குறையுமா? உண்மையை உடைக்கும் ஆய்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

தடுப்பூசியால் ஆண்மை குறையுமா? உண்மையை உடைக்கும் ஆய்வு!

தடுப்பூசியால் ஆண்மை குறையுமா? உண்மையை உடைக்கும் ஆய்வு!


கொரோனா பரவலை தடுப்பதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, உலகம் முழுவதும் பல நாடுகளில்கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தடுப்பூசிகள் குறித்து சில வதந்திகளும் பரவி வருகின்றன. தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஃபைசர், மாடர்னா ஆகிய கொரோனா தடுப்பூசிகளை போடுவதால் ஆண்மை குறைவு ஏற்படும் எனவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும் சில வதந்திகள் பரவி வந்தன.

இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு JAMA இதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை போடுவதால் ஆண்மைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 18 வயது முதல் 50 வயது வரையிலான ஆரோக்கியமான ஆண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஃபைசர், மாடர்னா தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. முதல் டோஸ் போட்டு ஏழு நாட்களுக்கு ஒரு முறை விந்தணு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 70 நாட்களுக்கு பின் மற்றொரு பரிசோதனை மேறொகொள்ளப்பட்டது. அதில், தடுப்பூசி போடுவதால் ஆண்மைக்கும், விந்தணு எண்ணிக்கைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad