இந்த மூன்று பேருக்கு அந்த பதவியா? ரகசியமாய் காய் நகர்த்தும் உடன் பிறப்புகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

இந்த மூன்று பேருக்கு அந்த பதவியா? ரகசியமாய் காய் நகர்த்தும் உடன் பிறப்புகள்!

இந்த மூன்று பேருக்கு அந்த பதவியா? ரகசியமாய் காய் நகர்த்தும் உடன் பிறப்புகள்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முகமது ஜான், மார்ச் மாதம் உயிரிழந்தார். அவரது பதவி காலியானது. அவரது பதவி காலம், நான்கு ஆண்டுகள் மீதம் உள்ளன. அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏக்களானதால் தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.

வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டும், கே.பி.முனுசாமி பதவிக் காலம் முடிய, ஐந்து ஆண்டுகளும் உள்ளன. தற்போது, காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

இந்நிலையில் 'மூன்று பதவிகளுக்கும், தனித்தனியே தேர்தல் அறிவிப்பு வெளியிட வேணடும்' என, திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் மூன்று இடங்களையும் திமுகவே கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மூன்று இடங்கள் யாருக்கு என்பது குறித்துதான் தற்போது திமுகவுக்குள் ஒரே பேச்சாக உள்ளது. ஓபிஎஸ்ஸை எதிர்த்து போட்டியிட்டு கடும் நெருக்கடி கொடுத்த தங்க தமிழ்ச் செல்வன், எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து களமாடிய கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


இவர்கள் இருவருமே கட்சிக்குப் புதியவர்கள். அதே சமயம் மீதமிருக்கும் ஒரு இடத்தை திமுகவின் மூத்த உறுப்பினருக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற இந்த மூன்று பேருக்கு இடங்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் போட்டியிடவே வாய்ப்பளிக்காத பலரும் தங்களுக்கு கொடுங்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad